நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி, அந்த நாளை மக்கள் மிக விமர்சியாக கொண்டாட எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தியை இன்று, நேற்று அல்ல காலம் காலமாக நம் முன்னோர்கள் மிக விமர்சியாக கொண்டாட காரணத்தை பலர், பல வகையில் கூறினாலும், அதில் நம் முன்னோர்களின் அறிவியல் பூர்வமான செயல்களும், வாழ்வு முறையும் ஒளிந்திருப்பதை நாம் உணரலாம்.

மழைக்காலங்களில் விநாயகர் சதுர்த்தி நாள் வருவதால் அந்த நாளை கொண்டாடும்போது மக்களுக்கு பயன்படும் வகையில் அந்த நாளை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் முறையை நம் முன்னோர்கள் திட்டமிட்டு வகுத்திருக்கிறார்கள்.
அதன்படி, மழைகாலம் துவங்குவதற்க்கு முன்பாக குளங்களில் உள்ள களி மண்னை விநாயர் சிலை செய்ய மண்பாண்ட தொழிலாளர்கள் எடுத்து வைத்திருப்பார்கள். பின்னர் விநாயகர் சதுர்த்திக்கு சில தினங்களுக்கு முன்பாக அந்த களிமண்ணில், விநாயகர் சிலையை செய்து வழிபடுவார்கள். பிறகு, இரண்டு அல்லது மூன்று தினங்கள் கழித்து அந்த விநாயகர் சிலையை மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுத்த அதே குளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மீண்டும் இந்த சிலையை கரைத்து விடுவார்கள்.


பின்னர், விநாயகர் சதுர்த்தி தினங்களுக்கு அடுத்து வர நாட்களில் தான் அதிக கன மழைகள் பெய்து அனைத்து நீர் நிலைகளும் தண்ணீர் தேங்கி நிற்கும்.
அப்போது, ஏற்கனவே மண் எடுத்த பள்ளங்களில் உள்ள மணல், மழை நீரை பூமிக்கடியில் உள் தேவையான அளவிற்கு புரிந்து கொள்ளும், அதனால் நிலத்தடி நீர் பெருகும், பல நாட்களுக்கு பிறகு தண்ணீரில் போட்ட இறுகிய சிலை கரைந்து மீண்டும் குளத்தின் தரையில் படர்வதால், குளத்தில் நீர் வற்றாமல் சேமித்து வைக்கப்பட்டு மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்தபடுகிறது.
இந்த சுழற்ச்சி முறைக்காகவே நம் முன்னோர்கள் விநாயகர் சதுர்த்தி நாளில் களி மண்னில் விநாயகர் சிலை செய்து வணங்கி வந்திருக்கிறார்கள்.

நாம் அதை உணராமல் காலத்திற்க்கு வேண்டிய மாற்றம், என சொல்லி கொண்டு மதவாதிகளின் தூண்டுதலால் அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக மக்களிடம் அவர்கள் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு, விநாயகர் சதுர்த்தினாளை பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்ற மத வெறியை தூண்டி, அவர்களைக் கொண்டு ஒவ்வொரு தெருக்களிலும் பெரிய பெரிய அளவிற்கு , கலர், கலராய் விநாயகர் சிலைகளை வேதி பொருட்களை கொண்டு உருவாக்கி பின் தண்ணீரில் கரைக்க செய்கிறார்கள். அதனால் சுற்றுசூழல் மாசுபடுவதுடன் நீர் வாழ் உயிரினங்களும் பாதிக்கபடுகின்றன.


ஆகவே… வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை களி மண்னால் செய்ய கூடிய சிலையை மட்டுமே, வாங்கி பயன்படுத்தவும். அதனால் சுற்றுசூழல் காக்கபடுவதுடன். ஏழை மண்பாண்ட தொழிலாளிகளும் மகிழ்ச்சி கொள்வார்கள் என்பதை உணருங்கள்….
P.G.பாலகிருஷ்ணன் / எதிரொலி / 893947677
