உலகத்தையே ஏமாற்றிய திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியை ஏமாற்ற எவ்வளவு நேரம் ஆகும் என கூட்டணி ஆட்சி ஒத்துவராது என ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்கு முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விமர்சனம் செய்துள்ளார்.

100 நாள் வேலை திட்டத்தை 125. நாளாக உயர்த்தி மத்திய அரசு தெரிவித்த நிலையில் அதனை மாற்றி திசை திருப்ப நினைக்கும் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜக, அமமுக,பாமக, தமாக உள்ளிட்ட கூட்டணி கட்சி என கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆயிரம் ரூபாயை மகளிருக்கு அளித்து 7,000 கோடி கஜானாவை காலி செய்தும் அடுத்த ஆட்சி திமுக ஆட்சி என முதல்வர் கானல் நீர் கனவில் உள்ளார் என தெரிவித்தார்.

மேலும், பொதுமக்களிடையே திமுகவுக்கு வெறுப்பு அலை உள்ளது. தனக்கு தானே சர்டிபிகேட் கொடுத்து கொள்கின்றார். தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் பேசி அவர் Blue print முதல்வராக உள்ளார் என குற்றம் சாட்டினார். தேசிய ஜனநாயக கூட்டணி தேனும், பாலும் கூட்டணி போன்றது, திமுக கூட்டணி எண்ணெயும் தண்ணீரும் கலந்து கூட்டணி என்று விமர்சித்த அவர், கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதல்வர் கூறி இருந்த நிலையில் உலகையே ஏமாற்ற தெரிந்த திமுகவிற்கு காங்கிரசை ஏமாற்ற தெரியாதா? எனவும் சூசகமாக தெரிவித்தார்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed