பண்ருட்டியில், தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் கடந்த மூன்று தினங்களாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட கோட்ட வட்டார அளவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட தமிழ அரசின் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் உள்ளன. அதில், 150 க்கும் மேற்பட்ட நியாயவிலை கடை ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், கடந்த மூன்று தினங்களாக மாவட்ட கோட்ட வட்டார அளவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், இறுதி நாளான இன்று பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட நியாயவிலை கடை ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, வட்டார ஒருங்கிணைப்பாளர் முரளி பதினைந்து அம்ச கோரிக்கையை பாடலாக பாடி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செய்தார். நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட நியாயவிலை கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

எதிரொலி / 8939476777
