பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்பாட்டதில் காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலத்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

திமுக ஒன்றிய செயலாளர் கே. ஆர்.கே. நரசிம்மன் தலைமையில், நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காட்டுப்பட்டி கதிரவன், செந்தில், காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் வினோத் குமார், சசிகுமார், மத்தூர் வட்டார தலைவர் தனஞ்ஜெயன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ராமன், சோழாம்பதி, முன்னாள் வட்டார தலைவர் லோகநாதன், மாவட்ட பொது செயலாளர் வினோத்குமார், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சபாபதி, வினோதன், சிவம்பட்டி சங்கர், கண்ணன், டெல்லி வெங்கடபதி, வேடி, சாம்ராஜ், ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், மத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சியின் சார்பில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்காததற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம், உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளும் பிரதிநிதிகளும் பங்கேற்று, மத்திய பிஜேபி அரசு மற்றும் பிஜேபி அரசுக்கு ஒத்து ஊதும் அதிமுக கட்சியை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி செய்தியாளர் : மாருதி – மனோஜ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed