மத்திய அரசை கண்டித்தும் மக்களை பாதிக்கும் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சார்பில் கும்மிடிப்பூண்டியில் ரயில் மறியல் ஆர்ப்பாட்டமும் உருவ பொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் சம்யுக்த்தா கிசான் மோர்சா, எல்பிஎஃப், ஐஎன்டியுசி, ஏஐடியுசி , சிஐடியு, ஏஐசிசிடியு , எச்எம்எஸ், யூடியூசி, ஏஐயூடியூசி, எம்எல்எப், எல்எல்எப், டபுள்யுபிடிசி, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம், பாதுகாப்பு ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து கும்மிடிப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசின் மக்களை பாதிக்கும் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நேசகுமார் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் கோபி நயினார், கருத்தியல் பரப்பு மாநில செயலாளர்கள் நெடுஞ்செழியன் ,அச்சு ஊடக மாநில செயலாளர் பாக்சர் மணி ,ஒன்றிய செயலாளர் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் டி.கே.வி. குமார், அறிவுச்செல்வன், சந்தோஷ் குமார்,.ஜீவா, வெற்றிச்செல்வி, சிவராஜ், தங்கராசு, மதன்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தன்னை விவசாய சங்க மாநில செயலாளர் துளசி நாராயணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், சஐடியூ ஒருங்கிணைப்பாளர் சூரிய பிரகாஷ், ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் ,விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் லோகநாதன், டிஒய்எஃப்ஐ மாவட்ட துணைத் தலைவர் வசந்த பௌத்தா,விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஜெ.அருள், மாவட்ட குழு உறுப்பினர் உமாநாத், விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ஊர்வலமாக வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் போலீசாரின் பலத்த தடையை மீறி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். பின்னர் அந்த வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து மறியல் ஈடுபட்டனர் .அதனைத் தொடர்ந்து உருவ பொம்மையை எரித்து மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு போலீசார் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர் . இந்த நிலையில் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட தொழிற்சங்கத்தினரை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் நேரில் சந்தித்து தொழிற்சங்கத்தினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், தொழிற்சங்க தலைவருமான மணிபாலன் உடன் இருந்தார்.

செயலாளர் : ஜான் பிரான்சிஸ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed