கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வாணியர் தெருவில் இருக்கும் பழைய கால அஸ்திரி சிவன் ஆலயம் பழமை வாய்ந்த கோயில் சிதலம் அடைந்திருந்த நிலையில் செப்டம்பர் மாதம் 13 ம் தேதி ஞாயிறு விடியற்காலை இன்று சுப முகூர்த்த காலத்தின் படி, இன்று பூமி பூஜை நடைபெற்றது.
இந்த பூமி பூகையின் போது ஊர் பெரியவர்களும் தாய்மார்களும் கலந்து கொண்டு இந்த கோவிலை கட்டி சிறப்பாக கட்டி முடித்து தர அனைவரும் முன் வரவேண்டும் இந்த சிவன் அருள் பெற வேண்டும் என்று பிரம்மாண்ட பூமி பூஜை நடைபெற்றது.

சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் அனைத்து கிராம மக்களும் ஒன்று கூடி இந்த கோவிலை கட்டி வழிபாட்டு தளம் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும். இதற்கு அனைத்து சிவன் பக்தர்களும் ஒன்று கூடி இந்த கோயில் கட்ட ஆதரவு தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சார்பாகவும், கோவில் நிர்வாகம் சார்பாகவும் வேண்டி கேட்டு கேட்டுக்கொள்ளப்பட்டது.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 893947677
