காட்டுமன்னார் கோவில் அருகே, நான்காண்டுகளாக சேதமடைந்து உள்ள பிரதான சாலை பேருந்து, அவசர ஊர்திகள் வருவதற்கு கூட லாயக்கற்ற சாலையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணியின் போது சாலையை சேதமாக்கி சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் வேதனை.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே எய்யலூர் சிறுகாட்டூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, எயலூர் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காட்டுமன்னார் கோவில் வருகின்றன.

அந்த சாலை முழுவதும் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்வதற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது, எனவும் அதேபோல் விவசாய பணிக்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது, இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள்.

சிறுகாட்டூர் செல்லும் சாலை மற்றும் கீழ் புளியம்பட்டியில் இருந்து ஓமாம்புலியூர் செல்லும் சாலை அதேபோல் கிருஷ்ணன் கோயில் அருகே உள்ள சாலை முற்றிலும் சேதம் அடைந்து நான்கு ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் இந்த வழியாக செல்லும் வயதானவர்கள் மாணவ, மாணவிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் இரவு நேரத்தில் இந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

நல்லா இருந்தா சாலையை கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்டு சேதமான நிலையில் அதனை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டுகளின் கோரிக்கையாக உள்ளது.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed