கடலூரில், உள்ள தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியார் கலைக் கல்லூரியில் இரண்டாவது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில், 100-க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்களில் கருப்பு துணியால் கட்டிக்கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,


இதில், UGC நிர்ணயித்த ரூ.57, 700 ஊதியத்தை கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும், அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாதம் சம்பளம் வழங்க வேண்டும். பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கவேண்டும், அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் PF & EPF வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 இலட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும், தொடர்ந்து நாளையும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுபட போவதாக தெரிவித்தனர், மேலும், விடியல் அரசு என்று சொல்லிக் கொள்ளும் திமுக அரசு மக்களை பல்வேறு போராட்டங்களுக்கு உட்படுத்துவதால் எப்படி சரியான அரசாக இருக்க முடியும் என ஆசிரியர்கள் தொடர் கோஷங்கள் வாயிலாக, கேள்வி எழுப்பினர்.

எதிரொலி / 8939476777
