இருவீட்டாரின் ஒப்புதலோடு கனடா நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் பணி செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொண்ட மதுரையைச் சேர்ந்த மணமகன். தமிழர் பாரம்பரிய முறைப்படி ஓதுவார்கள் மந்திரம் ஓத திருமணம் நடைபெற்றது.

சென்னை பெரு நகர துணை ஆணையராக இருந்து ஓய்வு பெற்றவர் முனைவர் ஆ.மணிவண்ணன். இவரது மகன் தாமரைச்செல்வன் பொறியியல் படித்துவிட்டு தற்போது கனடா நாட்டின் தெற்கு சிட்னியில் அமைந்துள்ள வால்மார்ட் நிறுவனத்தின் மேலாளராக பணி செய்து வருகிறார்.

அங்கு காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் ஸ்டீபன் கோக்ரன் மற்றும் ஆசிரியை மேரி கோக்ரன் ஆகியோரது மகள் கெல்சி கோக்ரன் மழலையர் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.
தாமரைச்செல்வன் மற்றும் கெல்சி கோக்ரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் புரிந்து வந்த நிலையில், இரு வீட்டாரின் ஒப்புதலோடு, இன்று மதுரை பசுமலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.

கெல்சி கோக்ரனின் பெற்றோர் கனடாவில் தாத்தா பாட்டி 98 வயது மற்றும் 100 வயது நிறைவடைந்த முதியவர்கள் கனடாவில் இருப்பதால், அவர்கள் இத் திருமணத்தை இணையதள வசதியாய் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

காளமேகம் : மதுரை
எதிரொலி : 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed