திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாக இயக்குனரகம், தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம், பொன்னேரி நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நடைபெற்றது.

இதில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை,தாட்கோ,தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம்,வீடு நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலத்துறை, மகளிர் மேம்பாட்டு துறை, தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் தூய்மை பணியாளர்களுக்கு தங்கள் சேவைகளை வழங்கினர்.

ஆதார் கார்டு மாற்றுதல்,திருத்துதல், குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,நல வாரியத்தில் பதிவு,மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பதிவுகள் அதற்கான தீர்வுகள் பெறப்பட்டது. பொன்னேரி நகராட்சி ஆணையர் நளாயினி முன்னிலையில் நடைபெற்ற முகாமினை பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

துணைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் சாமுவேல் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள்,வார்டு கவுன்சிலர்கள் யாக்கோபு, பரித்தா ஜெகன், சிறப்பு வார்டு கவுன்சிலர் கருணாகரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed