கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாளம் ஊராட்சி, சித்தாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், பெட்டமுகிலாளம், இரத்தினகிரி மற்றும் இருதுகோட்டை மலைவாழ் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் 153 பள்ளி மாணவர்களுக்கு பிறப்பு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் வழங்கினார்.

உடன், ஒசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) தமிழ்ச்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
