
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் நகரில் பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் தடுப்பு குறித்து பல்வேறு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அய்யம்பட்டி பகுதியில் போதை பொருட்கள் நடமாட்டம் தடுப்பு குறித்து சோதனையில் ஈடுபட்டு வந்தபோது அதே பகுதியை சேர்ந்த சத்யா (வயது 40) ஸ்ரீவில்லிபுத்தூர் ஓட்டமடம் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 25) இடைய பொட்டல் தெருவை சேர்ந்த முத்து சுரேஷ் (வயது 32) ஆகிய மூன்று பேரும் அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர்.

போலீசார் விரைந்து வந்து மூவரையும் நிறுத்தி சோதனை இட்டபோது இவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா ஒரு கிலோ 100 கிராம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக நகர் போலீசார் சத்தியா, முத்துப்பாண்டி, முத்து கணேஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து கஞ்சாவை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் ; தேவதர்ஷினி எதிரொலி ; 8939476777
