கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரி பட்டினம் அருகே உள்ள ஜெகதாப் அரசு உயர்நிலைப் பள்ளியில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கிராமிய பெண்கள் அறக்கட்டளையும் இணைந்து குழந்தை கடத்தல் தடுப்பு தினம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி சக்தி சுபாஷினி கலந்துக் கொண்டு குழந்தைகள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், பாதுகாப்பான முறையில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது மட்டுமன்றி, குழந்தைகள் கடத்தலை எப்படி தடுப்பது குறித்தும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

மேலும் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கின் போது உத்தர குமார் வரவேற்புரை ஆற்றினார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி, குழந்தைகள் நல குழு உறுப்பினர் மோகன், மாவட்ட குழந்தைகள் உரிமை திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குழந்தை கடத்தல் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கூட்டம் முடிவில் வரலட்சுமி நன்றியுரை ஆற்றினார்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
