கிருஷ்ணகிரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் துவங்கப்பட்ட அம்மா உணவமானது தற்போது பொது மக்களின் வசதிக்காக தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் உத்தரவிற்கிணங்க அம்மா உணவகத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் பொதுமக்களின் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனை முன்பாக உள்ள அம்மா உணவகத்தில் தினமும் காலை மாலை என 500க்கும் மேற்பட்டோர் இங்கு உணவு அருந்தி வருகின்றனர்.
இங்குள்ள அம்மா உணவகத்தில் சுகாதார சீர்கேடு மற்றும் தரமற்ற உணவு வழங்குவதாக சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகனுக்கு தகவல் வந்ததை அடுத்து, இன்று கிருஷ்ணகிரி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜலகர் தலைமையில் சமூக ஆர்வலர் சந்திரமோகன் ஆகியோர் திடீரென பார்வையிட்டனர்.

அப்போது அம்மா உணவகத்தை சுற்றி சுகாதார சீர்கேடாக இருந்ததாகவும், அம்மா உணவகத்தில் உள்ள சமைக்க பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் உபயோகமற்ற நிலையில் சீர்கேடாக இருந்ததாகவும் மேலும் அங்குள்ள கதை வருது பெருச்சாளிகள் நுழைந்து உணவு பொருட்களை நாசம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் பல்வேறு விதமான பொதுமக்கள் உணவு அருந்த இங்கு வருவதாலும் எதிரே பொது மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்களும் இங்கு உணவு அருந்த வருவதாலும் அவர்கள் பயன்படுத்தும் தட்டில் இதற்கு மேல் வாழையிலை வைத்து உணவு பரிமாற வேண்டுமென, தமிழக முதல்வருக்கு சமூக ஆர்வலரும் சமூக நல பாதுகாப்பு மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் வேண்டுகோள் விடுத்தார். மேலும் இனிவரும் காலங்களில் தரமான உணவு வழங்கிட வேண்டும் எனவும் சுற்றுப்புறம் சுகாதாரம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அங்கு பணியில் உள்ள பெண்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்வின்போது இளநிலை உதவியாளர் பெரியண்ணன், நகராட்சி அம்மா உணவக பொறுப்பாளர் நாகராஜ், சமூக நுகர்வோர் அமைப்பு சார்ந்த அன்புச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
