வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தின் சார்பில் ஆண்கள் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி குடியாத்தம் செருவங்கி நகராட்சி பள்ளி திடலில் இரண்டு நாட்கள் இரவு பகல் ஆட்டமாக மின்னொழியில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணை தலைவர் இராசி. தலித் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குகபடி கழக சேர்மன் சீவூர்சேட்டு பரிசு வழங்கினார். பொருளாளர் அம்மன் ரவி துணைத் தலைவர்கள் இளையராஜா (எ) பிரபாகரன் செ.கு. வெங்கடேசன், ஆறுமுக தாசன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஆனந்தன் போட்டியை துவக்கி வைத்தனர்.

அரசு வழக்கறிஞர் விஜயகுமார் வழக்கறிஞர் செந்தில்குமார் குமரன் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் குமரகுரு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். போட்டியில் நடுவர்களாக கோபாலன் சிவராமன் பாஸ்கர் சுந்தர் மோகன் பணியாற்றினர்.

போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எவரெஸ்ட் கேம்ஸ் கிளப் செய்திருந்தனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் ; மூர்த்தி எதிரொலி /. 8939476777
