வேலூர் மாவட்டம்,குடியாத்தம் காக்க தோப்பில் அமைந்துள்ள அத்தி மருத்துவமனை சார்பில் தேசிய மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது . இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கி விழாவினை துவக்கி அணைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவ தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தலைமை விருந்தினராக முன்னாள் மேதகு ஆளுநர் (தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ) தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கலந்துக்கொண்டு மருத்துவர்களின் பங்களிப்பு , சேவை , அன்பு மற்றும் அரவணைப்பு மனப்பாங்கோடு பொதுமக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்றும் இன்று தவறான மாத்திரைகளை உட்கொள்ளுதலை தவிர்த்தல் அதற்க்கான விழிவிப்புணர்வு பொது மக்கள் இடையே ஏற்படுத்தவேண்டும் என கேட்டுக் கொண்டு தேசிய மருத்துவ தின வாழ்த்துக்களை தெரிவித்தார் .
கௌரவ விருந்தினர் வேலூர் சி .எம். சி . மருத்துவமனை டாக்டர் சந்தோஷ் வர்கீஸ் , சிறப்பு விருந்தினர் வித்யாலட்சுமி கல்விக் குழுமம் தாளாளர் அசோக்குமார் அவர்கள் அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்தார் . அத்தி மருத்துவமையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ. கென்னடி அவர்கள் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் மகேஷ் ராஜாமணி , அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் பால்ராஜ் சீனித்துரை மற்றும் குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே. குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் உத்தமன் ,ஹேமலதா ,சதீஷ், நட்ராஜ் , கல்பனா , சஞ்சைகாந்தி , சசிரேகா , பாரதிமாறன் ,தங்கபாலு , கவிதா , செல்வம் , பிரியதர்ஷினி , அத்தி மருத்துவர்கள் பாலாஜி , கீர்த்தனா , சங்குமலர் செல்வன் , நிகிதாபிரியங்கா ,புவனேஸ்வரி, அமுதன் , சிவகுமார் , தினேஷ் , அகல்யா , அக்ஷயா ஸ்ரீ , கேசவநந்தினி அனிதா , அறிவிச்சுடர், காவியா மற்றும் அஜித்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர் . இறுதியில் மருத்துவர்களுக்கு அத்தி கல்லூரி சார்பாக பாராட்டு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது .
அத்தி கல்விக் குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் சௌ .சுகநாதன் சௌந்தரராஜன் அவர்கள் இவ்விழாவினை ஒருங்கிணைத்தார் .
வேலூர் மாவட்ட செய்தியாளர் ; மூர்த்தி எதிரொலி /. 8939476777
