மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை செல்லும் சாலையில் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்கு இறந்து கிடந்துள்ளது. இன்று 01.07.2026 இதை கிராம மக்கள் பார்த்து உள்ளார்கள். உடற்கூராய்வுக்கு வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கு எடுத்து வைத்துள்ளார்கள். பின்னர்,
வனத்துறையும் அதை வாங்கி சென்றுள்ளார்கள்.

ஏற்கனவே, இந்த பகுதியில் கல்குவாரி வேலைகளும் நடந்துள்ளது.
பொதுவாக தேவாங்கை பாதுகாப்பதற்கு இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) தேவாங்குகளை அழியும் அபாயமுள்ள உயிரினங்களின் பட்டியலில் வைத்துள்ளது.
இந்திய வனவிலங்குகள் சட்டம் 1972-ன் படி முதல் அட்டவணை பிரிவில் வைத்துள்ளது.

இந்த சட்டத்தின் படி தேவாங்கு வாழும் பகுதியில் அதை பாதிக்கும் கல்குவாரி போன்ற சுரங்க வேலைகள் நடத்தக்கூடாது. சிறுகனிம சலுகை விதிகள் சட்டத்திலும் உள்ளது.
எனவே அருவிமலை பகுதியில் தேவாங்கை பாதுகாப்பதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லுயிர் சூழலை பாதுகாப்பது மட்டுமே பூமியை சமநிலையில் வைத்திருக்கும்.

பாதுகாப்போம் அருவிமலையையும், பல்லுயிர் சூழலையும்!!

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed