மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை காளியம்மன் கோவில் 31 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி செவ்வாய் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பது நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினசரி ஆன்மீக சொற்பொழிவு கும்மிப்பாட்டு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது வைகை ஆற்றில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் அக்னிச்சட்டி எடுத்து கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் qqசெலுத்தினர் தொடர்ந்து கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். Geஅதனைத் தொடர்ந்து gf nhtwlfàévá4 பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

இரவு முளைப்பாரி எடுத்தல் அதனைத் தொடர்ந்து சக்தி கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இரவு கோவில் முன்பு வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது தொடர்ந்து திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியான வைகை ஆற்றிற்கு சென்று முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது திருவிழா ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் விழா குழுவினர்கள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed