ஊட்டியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநில தலைவர் தோழர் டி. எஸ். ஆர். சுபாஷ் தலைமை ஏற்று நடத்தினார் !இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உதகை நகர காவல் துணை கண்காணிப்பாளர் வசந்த குமார் அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் கோவை S. மோகன் ராஜ், மற்றும் நிர்வாகிகள் ராஜா,பாலமுருகன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். நீலகிரி மாவட்ட நிர்வாகி ஜெரால்டு அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து RMN சுரேஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து மாநிலத் தலைவர் தோழர் DSR சுபாஷ் அவர்கள் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது தொடங்கி இச்சங்கத்தின் நோக்கம் என்ன? தற்போது இந்த சங்கத்தின் செயல்பாடுகள் என்பதை குறித்து விளக்கமாக தெரிவித்தார். இச்சங்கம் பத்திரிகை சார்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் எந்த விதத்தில் துணையாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என்பதையும் விவரித்து பேசினார்.

தொடர்ந்து பேசிய உதகை நகர காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள், காவல் துறைக்கும், பத்திரிகையாளர் களுக்கும் இடையே இருக்க வேண்டிய தொடர்பை குறித்து பேசினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினருக்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட தலைவராக M.N. சகாயராஜா, மாவட்ட செயலாளராக A. ஜெரால்டு, மாவட்ட பொருளாளராக KST மகேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளராக G. சுரேஷ் ஆகியோரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் இன்று இயற்கை எய்திய கவிஞர் கோவை திரு புவியரசன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முடிவில் கோபால் அவர்கள் நன்றி கூற இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
