இந்த கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை திருமதி. கீதா ராணி, நேர்முக உதவியாளர் திருமதி. திலகம், தமிழ்நாடு வாணிபக் கழக துணைப்பதிவாளர் சிவகுருநாதன், மண்டல மேலாளர் தணிகாசலம் தலைமையில் நடைபெற்றது.

இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிலிருந்து பெறப்பட்ட நுகர்வோர் புகார்கள், நிவாரணம் வேண்டுதல்களை, நுகர்வோர் விழிப்புணர்வு நலச்சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பயிற்சி இயக்குனர் ஜாய் அவர்கள் பேசுகையில்,

கிருஷ்ணகிரி வட்டம், அகசிப்பள்ளி பஞ்சாயத்து மோட்டூர் பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அந்த பகுதி மக்களுக்கான சுடுகாட்டு சுற்றுச்சுவர், சடங்குகள் செய்ய நீர் ஆதாரமும், மின் கோபுர விளக்கும் ஏற்படுத்தி தர தொடர்ச்சியாக பகுதி மக்கள் வேண்டுதல் வைத்துள்ளனர்.
அதே போல் கனகமுட்லு பகுதியில் நியாய விலை கடையை இரண்டாகப் பிரித்து மோட்டூர் பகுதிக்கு புதிய நியாய விலை கடை தொடங்கினால், அப்பகுதி மக்களுக்கு பொருட்கள் வாங்க அணுகுவதில், நெருக்கடியும் மக்கள் போக்குவரத்து தொலைவும் குறையும் எனவும் வேண்டுதல் வைத்துள்ளனர்.

அதேபோல் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட ஜோதி விநாயகர் கோயில் தெரு, முதலாவது தெருவில், பாதாள சாக்கடை அமைத்து நடைமுறைக்கு கொண்டு வராததால் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் சாக்கடை கால்வாய் மூலம் வெளியேற்றம் அடையாமல், குடியிருப்பு வாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

திறந்த கழிவுநீர் கால்வாயும், சிதலமடைந்து மூடிய நிலையிலும், ஆங்காங்கே சாக்கடைகழிவுகள் தேங்கியும், நோய் தொற்று பெறுவதற்கான சூழ்நிலை இருப்பதை சுட்டிக்காட்டி பொதுமக்கள் வழங்கிய வேண்டுதலை சுட்டிக்காட்டியும், தேசிய நெடுஞ்சாலைகளில் சேலம் மேம்பாலம், ராயக்கோட்டை மேம்பாலம் கிருஷ்ணகிரிக்கு நகரத்திற்குட்பட்ட புறவழிச் சாலைகளில் (சர்வீஸ் -ரோடு)நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்து போக்குவரத்து பாதிப்பு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உடனடியாக தேசிய நெடுஞ்சாலைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு தெரிவித்து மழைக்கால அவசரம் கருதி நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை வைக்க வேண்டும்‌.

கிருஷ்ணகிரி நகரத்தை சுற்றியுள்ள கிராமங்கள், முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் பதிவு, மருத்துவம், அரசு மருத்துவமனையில் பதிவு செய்வதற்காக குறிப்பிட்ட பெல்லாரம்பள்ளி சுகாதார மையத்தை அணுக வேண்டிய நெருக்கடியை தளர்த்த வேண்டும், கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து அங்கு செல்ல 15 முதல் 20 கிலோமீட்டர் இருப்பதாகவும், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் அதை அணுகுவதில் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதில் போக்குவரத்து சிரமமும், நேர விரயம், பண விரயம் உள்ளது. எனவே அரசின் திட்டங்கள் எளிமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கிருஷ்ணகிரி நகரத்திலுள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு எந்தவித நெருக்கடியையும் கொடுக்காமல் மாற்றி தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை கர்ப்பிணிகளிடம் இருந்து பெறப்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்ந்து உணவு பொருட்கள் காலாவதி, தரம் இல்லாத உணவு, குப்பை அகற்றுவதில், உள்ள சீர்கேடுகள் முறைகேடுகளை குறித்து பல்வேறு ஆலோசனைகளுடன் கோரிக்கை வைத்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் தங்கள் சார்பில், கோரிக்கைகளையும் வைத்து பொதுமக்களுக்கு சிறப்பான நடவடிக்கையாக எடுக்க மாவட்ட ஆட்சியரும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், மாவட்ட வழங்கல் அலுவலர் இந்த புகார்கள் குறித்து குறிப்பிட்ட துறை வாரியாக அனுப்பப்பட்டு அதற்கான நிவாரணமும் நடவடிக்கையும், கலந்து கொள்ளாத துறைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அவர்களுக்கான அறிவிப்பு, ஒழுங்கு நடவடிக்கைக்கான வழிமுறையும், மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்து கூட்டம் நிறைவுற்றது.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed