கிருஷ்ணகிரி நகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக, 5 வயதுக்குட்டபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.பா.முகுந்தன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் என்.ஷாஜகான் ஆகியோர் துவக்கி வைத்து, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்கள்.

உடன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.இனியள் மண்டோதரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
