திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், பெரியகரும்பூர், ஊராட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு சிறுவர், இளைஞர்கள், விளையாட்டு மைதானம் ஏற்படுத்தும் முயற்சியில் கிளை செயலாளர் உமாபதி தலைமையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றம், மாவட்ட ஆட்சியரிடம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மனு அளிக்க பட்டது.

இதனை எதிர்த்து ஹரி கிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் செயலாளர் உமாபதி மீது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு 2026 ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் வழக்கு சம்மந்தப்பட்ட நிலம் தனிநபர் யாருக்கும் இல்லை. இது பொது புறம்போக்கு நிலம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தீர்ப்பு நகலுடன் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மாநில தலைவர் டாக்டர் இ. மெய்யழகன், தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட தலைவர், எஸ். உமாபதி, மாதனூர் ஒன்றிய செயலாளர் லோகநாதன், மாவட்ட பொருளாளர் ராமன்,கிளை தலைவர் சந்திரசேகர் மற்றும் பலர்

மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, சமிபத்தில் அளிக்கப் பட்ட நீதிமன்ற தீர்ப்பின் நகலையும், 2019ல் அளித்த மனுவின் நகலையும், காண்பித்து பிறர் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு, செய்வதை தடுக்க வேண்டியும், சிறுவர்கள் இளைஞர்களுக்கு, அம்பேத்கர் விளையாட்டு மைதானம் அரசு அமைத்துதர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

பெரிய கரும்பூரில், விளையாட்டு மைதானம் அமைக்க, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மாநில தலைவர் டாக்டர் இ. மெய்யழகன் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed