கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் நடைபெற்ற தமிழக விவசாய சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் ஜீலை 5 ம் தேதி நடைபெறும் பேரணியில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு வந்தவர்களை மஞ்சுநாத் வரவேற்றார், மேலும் இக்கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி மாவட்ட பொதுச்செயலாளர் அனுமந்தராசு மற்றும் தமிழக விவசாய சங்கத்தினை சேர்ந்த கோவிந்தன், சின்னசாமி, ராஜ்குமார், வேணுகோபால், வெங்கடேசன், விசுவநாதன், மூர்த்தி, நாகராஜ் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

மேலும் இக்கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் கலந்துகொண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இக் கூட்டத்தின் போது கெலவரப்பள்ளி அணையில் இருந்து சொல்லும் பாசன கால்வாய்களை தூர்வாரி அத்திமுகம், நல்லூர், நீலகிரி, மகாராஜா கடை, சிந்தகம் பள்ளி பருகூர் வழியாக பாம்பாற்றுடன் இணைக்க வேண்டும்,
விவசாயிகள் உற்பத்தி பதிவு செய்யும் நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,
தேங்காய் இறக்குமதிக்கு தடைவிதித்து, அரிசியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும், அழியாளம் அணைக்கட்டை 200 அடிக்கு உயர்த்தி கட்டி கெலமங்கலம் முழுவதும் பாசன வசதி செய்ய வழிவகை செய்யவேண்டும்,

வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்களுடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக முதல்வரை ரிசர்வ் வங்கி மற்றும் உயர் அதிகாரிகள் தவறாக வழி நடத்தக் கூடாது, ஜூலை ஐந்தாம் தேதி 5-ம் கிருஷ்ணகிரி நடைபெறும் பேரணியில் விவசாயிகள் பெரும் திரளாகக் கலந்துக் கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed