கோவில் நகரம் என்று அழைக்கக்கூடிய காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்,

வைகாசி மாத நான்காவது செவ்வாய்க்கிழமை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கும் வள்ளி,தெய்வயானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கிரீடம் தரித்து பட்டாடை உடுத்தி மல்லி பூ, சம்பங்கி, அரளி, ரோஜா மலர் , மஞ்சள் சாமந்தி பூ , போன்ற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைரவேலுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்க , சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாரதனை சுவாமிக்கு காட்டப்பட்டது.

பின்னர் சிவ வாத்தியங்கள் முழங்க, வள்ளி தெய்வயானையுடன் முருகப்பெருமான் வெள்ளி தேரில் எழுந்தருளினார்.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு அரோகரா என பக்தி கோஷத்துடன் வெள்ளி தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

செய்திகள் ; லட்சுமி கந்தன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed