விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோப்பையநாயக்கன்பட்டியில் அதிமுக பிரமுகரும் (மேற்கு மாவட்ட துணை செயலாளர்) சிவகாசி முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவருமான சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான குருலட்சுமி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமானது மேலும் 10 அறைகள் சேதமடைந்தன.
இந்த தீ விபத்தில் சிவகாசி சிலோன் காலனியை சேர்ந்த ராஜம்மாள் 60, என்ற பெண் தொழிலாளி 90 சதவீத தீக்காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
