சேலம் குகை கருங்கல்பட்டி மெயின் ரோடு, செங்கல்பட்டி முதல் தெருவில் உள்ள கஸ்தூரி ஹோமியோ கிளினிக்கில், குழந்தை இல்லா தம்பதிகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், பொது மருத்துவம் மற்றும் தோல் நோய் நிபுணர் டாக்டர்.எஸ்.ஆனந்த் தலைமையில் மருத்துவர்கள் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள். காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற்ற இம்முகாமில் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

இம்முகாம் குறித்து, டாக்டர்.எஸ்.ஆனந்த் கூறியதாவது:

சேலத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கஸ்தூரி ஹோமியோ கிளினிக் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரத்தியேகமாக குழந்தை இல்லா தம்பதிகளுக்கான மருத்துவம் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை இல்லா தம்பதிகளில் கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், நீர்க்கட்டி உள்ளவர்கள், தொடர்ச்சியான கருச்சிதைவு உள்ளவர்கள், விந்தணு குறைபாடு உள்ளவர்கள், குடும்ப கட்டுப்பாடு செய்து மீண்டும் குழந்தைபெற விரும்புபவர்கள், வயதாகிவிட்டது இனி குழந்தை பெற முடியுமா என்ற சந்தேகம் உள்ளவர்கள், இரண்டாவது குழந்தை வேண்டும் என விரும்புபவர்கள் மருத்துவ ஆலோசனைகள் பெற முன்வந்துள்ளனர்.

ஆங்கில வழி மருத்துவத்தைவிட ஹோமியோ மருத்துவம் பாதுகாப்பானது. பக்க விளைவுகள் இல்லாதது. அறுவை சிசிக்சை இல்லாமல் மிகக் குறைந்த செலவில் நோய்கள் குணமாகும் தன்மை உடையது. எனவே ஏழை எளிய மக்களுக்கான மருத்துவமாக ஹோமியோ மருத்துவம் விளங்கி வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்று பயனடைந்தனர்.

சேலம் செய்தியாளர்
கா. தங்கதுரை, 9442979467.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed