தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி (தனி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் எழில் இளவரசியை ஆதரித்து பரமக்குடி பஸ் நிலையம் அருகே பெருந்திரளாக கூடியிருந்த பெண்கள், குழந்தைகள், ஆண்கள், வாக்காளர்கள் மத்தியில் வாகன பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விவசாயி சின்னத்தில் வாக்குகள் கேட்டும்,
முல்லை - பெரியார் அணையை 152 அடி உயர்த்த வலியுறுத்தியும், நமது விவசாயிகளுக்கு கடந்த திராவிட கட்சிகளினால் ஏற்பட்டு வரும் கஷ்டங்களை பட்டியலிட்டு விவரித்து பேசினார். இலவசங்களை கொடுத்து ... கொடுத்தே ... நம் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
மேலும், நம் ஆட்சி அமைந்தவுடன் கல்வி, மருத்துவம் அடித்தட்டு மக்களுக்கும் பெருந்தலைவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதி போன்று கிடைக்கச் செய்வோம் . திரும்ப... திரும்ப... திராவிட கட்சிகளுக்கே வாக்குகள் அளித்து நாம் விலைவாசி உயர்வு , மின்சார கட்டணம் உயர்வு போன்று பல்வேறு துன்பங்களைத் தான் அனுபவித்து வருகிறோம் எனவும் கேட்டு விவசாயி சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக , கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் வினோத் கடந்த கால ஆட்சிகளினால் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் தொடர் இன்னல்களை விவரித்து பேசினார்.
பிரச்சாரத்தில் , மாநில தகவல் தொழில் நுட்ப அணி காமராஜ், மாநில நிர்வாகி ஜஸ்டின் வளனரசு, நகரச் செயலாளர் அருள் விக்டர், நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கட்சியினர்கள் உள்பட பெருந்திரளாக வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.


மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777
