தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவர் கற்பக விநாயகர் சத்தியகிரீஸ்வரர் துர்க்கை அம்மன் சுப்ரமணியசாமி தெய்வானை அம்மன் பவளக்கனி பெருமாள் ஆகியோர் தங்க கவசத்தில் அருள் பாலித்தனர் மேலும் விவசாயம் செழிக்கவும் மழை பெய்திடவும் திருப்பரங்குன்றம் கிராமத்து விவசாயம் செய்யும் பொதுமக்கள் சார்பாக நாலு ஏர்பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது .

இதனால் இன்று காலை விவசாய செய்யும் பொதுமக்கள் புத்தாடைஅணிந்து புதிய தார் குச்சி வாங்கி அதில் பூ சுற்றி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்பு விவசாய பொதுமக்கள் கிரி வலம் வரும்போது மலைக்கு பின்புறம் அமைந்துள்ள கோயில் நிலத்தில் விவசாயம் செழிக்கவும் மழை பெய்யவும் பிரார்த்தனை செய்து நாலு ஏழு ஏர் உழுதார்கள்.

அதன் பின்பாக மலை குகைக் கோயில் அடிவாரத்தில் மதியம்12 மணிக்கு கிராமத்து விவசாய மக்கள் ஒன்று அமர்ந்து கிராமத்து கூலி நிர்ணயம் செய்தார்கள்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed