இந்திய அரசியலமைப்பின் தலைவர் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 136 வது பிறந்தநாள் விழா கர்ப்பம் கற்பிப்போம் சேவை மையம் சார்பில் தருமபுரியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

அமைப்பின் தலைவர் பி சேகர் மற்றும் கௌரவத் தலைவர் ரங்கராஜ் அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜன் ஆகிய மூவரும் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். விழாவில் கலந்து கொண்ட அமைப்பின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் மூத்த நிர்வாகிகளான சஞ்சீவன், முருகன், பாரதி, மகேந்திரன், மேகநாதன், மகளிர் அணி துணைத்தலைவி திருமதி.வாணி, உட்பட ஏராளமான பொதுமக்களும் இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த விழா கூட்டத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் புகழ் மற்றும் அவரின் வாழ்க்கை நெறிமுறைகளை பாராட்டி அமைப்பின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பேசினார்கள். விழாவில் அமைப்பின் இளைஞர் அணி செயலாளர் எம்.மகேந்திரன், மாரண்டஹள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவி அருந்ததிக்கு உயர்கல்வி பயில உதவித்தொகையாக 10 ஆயிரம் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

விழா நிறைவில் தலைமை நிலைய செயலாளர் முருகன் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி பாராட்டினார்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed