தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து திமுக உள்பட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலினை ராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஏ. ஜெய்னுல் ஆலம் கோரிக்கை மனு அளித்தார் . அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :
சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 3.5 சதவீத இட ஒதுக்கீடு தற்போதைய சூழ்நிலையில் போதுமானதாக இல்லை . எனவே தாங்கள் மீண்டும் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றவுடன் ஐந்து சதவீதமாக உயர்த்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மையவாடிகள் கிடையாது . எனவே அரசு புறம்போக்கு நிலங்களில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு கபரஸ்தானிற்கு இடம் ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் வலியுறுத்தி கூறியுள்ளார்.
அது சமயம், மாவட்ட ஐக்கிய ஜமாத் துணைத் தலைவர் அப்துல் முத்தலிப். மாவட்டச் செயலாளர் முகமது இலியாஸ். வட்டாரத் தலைவர் முகைதீன் முசாபர் அலி என்ற பாபு. துணைத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் உள்பட மாவட்ட ஐக்கிய ஜமாத்தினர் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
