தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ, முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தாங்கி பேசியதாவது,
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகின்ற 23.04.2026 . (வியாழன்) அன்று நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று இளம் வாக்காளர்களாகிய நீங்கள் உங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும்.
மேலும், உங்களுடைய நண்பர்களையும், பெற்றோர்களையும் , உறவினர்களையும் வாக்களித்திட எடுத்துக் கூற வேண்டும். மாணவர், மாணவியர்களாகிய நீங்கள் தான் நம்முடைய நாட்டின் எதிர்காலம். எனவே 23.04.2026 அன்று அனைவரும் தவறாமல் வாக்களித்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் கல்லூரி மாணவர் - மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு வரையப்பட்டிருந்த வண்ணக்கோலங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.


நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு , உதவி திட்ட அலுவலர்கள் தங்கப்பாண்டி , சித்ராதேவி , கல்லூரி முதல்வர் முனைவர் உதயகுமார், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட மாணவர், மாணவியர்கள், பேராசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777
