விருதுநகர் மாவட்டம் சேரி
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவிலில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி உள்ளது. கடந்த 2023-ஆம் கல்வியாண்டு முதல் இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டதாகக் கூறி மாணவர்களைச் சேர்த்துள்ளனர்.
ஆனால் மாணவர்களுக்கான சான்றிதழில் மகளிர் கல்லூரி எனவே குறிப்பிடப்பட்டுள்ளது. நாள் இங்கு பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது . இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புகார் அளித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர் .

தனியார் கல்லூரி கல்வித் துறையில் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இக்கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முறையான அங்கீகாரம் வழங்கியதா என்பது தற்பொழுது கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில், 2023க்கு பிறகு தொடங்கப்பட்ட பத்து மேற்பட்ட புதிய பாடப்பிரிவுகளுக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து உரிய அனுமதி பெறப்பட்டதா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, அங்கு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களிலும் ‘மகளிர் கல்லூரி’ என்றே பதிவாகி வருவதால், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. மேலும், போதிய பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக வசதிகள் இல்லாததால் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்துக் கேள்வி எழுப்பும் மாணவர்களுக்கு நிர்வாகம் தரப்பில் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த மாதம் பிப்ரவரி 25ம் தேதி அன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் கல்லூரி மாணவர்களின் நலன் காக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் அதன் பின்பு காமராஜர்பல்கலைக் கழகத்தில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கோரி மீண்டும் இன்று (புதனன்று) காலையில் இருந்து பல்கலை கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777
