தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசையும் அதற்கு துணை போகும் கூட்டணி கட்சிகளையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி தெற்கு, வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கருமாத்தூரில் நடைபெற்றது‌. செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துராமன் தலைமை வகித்தார்.
திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன்,
முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை ரவி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed