பொன்னேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியின் சார்பில், மகளிர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் செயலாளர் ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகைகள் அர்ச்சனா குமார் மற்றும் சுபத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவிகளை சிறப்பாக வரவேற்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கியதுடன், அதனுடன் சேர்த்து ஒவ்வொருவருக்கும் ஒரு டோக்கன் வழங்கி, அதன் எண்களை வைத்து குலுக்கல் முறையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. அந்த பத்து பேரில் ஒரு மாணவியை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, அவருக்கு மேடையிலேயே சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த நடிகைகள் தேர்வு செய்யப்பட்ட அந்த மாணவிக்கு கிரீடம் அணிவித்து சிறப்பு மரியாதை செலுத்தி கவுரவித்தனர்.

அதேபோல், கல்லூரி பேராசிரியர்களில் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பிடித்தமான பேராசிரியைகளை மாணவ – மாணவிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் மூன்று பேராசிரியர்களை தேர்வு செய்து, அவர்களும் மேடையில் வைத்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதேபோல், ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டணங்கள் ஏதும் இன்றி, ஏகலைவன் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையம் நடந்து வருகிறது. அதில், பயிற்சி பெற்று அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரியின் செயலாளர் ரமேஷ் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசை வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் கல்லூரியின் செயலாளர் ரமேஷ் அவர்கள், ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் தாளாளர் பச்சைப்பன் அவர்கள் உட்பட பலர் மாணவ, மாணவிகளுக்கு, அறிவுரைகளை வழங்கி உரையாற்றினர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed