விடுதலைப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை நினைவுகூறும் வகையில், இ.வே.அ.க- மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CIBA), நவம்பர் 1 முதல் 15 வரை ‘பழங்குடியினர் தினத்தை’ கொண்டாடுகிறது. *பழங்குடி மீனவர்களை வலுப்படுத்துதல், நிலைத்த மீன்வளம், அனைவரையும் உள்ளடக்கிய வாழ்வாதாரங்கள்” என்பதே நடப்பாண்டின் கருப்பொருளாகும்.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடியினப் பெண்கள் மற்றும் லட்சுமிபுரம், காட்டூர் – மீஞ்சூர் இருளர் கிராமத்தில் இருளர் சமூகத்தினருடன் ICAR- CIBA சார்பில் பழங்குடியினப் பயனாளிகள் சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.a

இந்நிகழ்ச்சியில் சமூக விழிப்புணர்வுக் கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் குறும்படத் திரையிடல் ஆகியவை இடம் பெற்றன. இந்த, மூத்த இருளர் பழங்குடியினப் பெண் திருமதி புஜ்ஜியம்மாள் அம்மையார், அவர்களின் நீண்டகால நிகழ்ச்சியில் அனுபவம் மற்றும் தொழில்மீதான ஈடுபாடு பாராட்டி கௌரவிக்கப்பட்டார். மேலும், இருளர் பழங்குடியினப் பெண்ணான திருமதி எம். உஷா அவர்கள், இக்கிராமத்திற்குத் தேசிய விருது பெற்ற பெருமை சேர்த்ததற்காக அங்கீகரித்துப் பாராட்டப்பட்டார்.

ICAR-CIBA முதன்மை விஞ்ஞானி டாக்டர் பி.சாந்தி மற்றும் அவரது குழுவினரால் தயாரிக்கப்பட்ட இருளர்கள் தமிழகத்தின் தொல் பழங்குடி மக்கள்- உவர்நீர் மீன்வளர்ப்பு மற்றும் வேளாண் சார்ந்த தொழில்நுட்பத் தலையீடுகள் மூலம் அவர்களின் வாழ்வாதார மேம்பாடு என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இம்முயற்சியில் சுமார் 50 இருளர் பழங்குடியினர் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

உவர்நீர் தொழில்நுட்பங்கள் மற்றும் வெற்றிக் கதைகளாக உள்ளூர் வளங்களுக்கு ஏற்ற வாழ்வாதார வழிகளாகப் பால்கெண்டை மீன், கொடுவா மீன் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மீன் தீவனம் தயாரித்த உவர்நீர் தொழில்நுட்பங்களை ICAR-CIBA ஊக்குவிக்கிறது.

இது குறித்த பயிற்சி மற்றும் தொழில் முறைகள் இந்த பகுதியில் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சிகளை ICAR-CIBA இயக்குநர் டாக்டர் எம். கைலாசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், முதன்மை விஞ்ஞானி டாக்டர் பி. சாந்தி, டாக்டர் சி.வி.சாய்ராம், டாக்டர் எம். பூர்ணிமா, டாக்டர் வித்யா, டாக்டர் அனந்தராஜா, ஆர், செல்வி ஸ்வேதா, ராகுல் மற்றும் நிறுவன குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed