​____________

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தில் நிலவும் சீர்கேடுகளைக் கண்டித்தும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி முடக்கத்தை நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் ​ மாநகர செயலாளர் D. ஸ்ரீதர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ​பஞ்சாயத்துராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்; மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய வார்டு மேம்பாட்டு நிதியை உடனே வழங்க வேண்டும். மாநகராட்சி மக்கள் பிரச்சனைகளில் உடனே கவனம் செலுத்தி, சாலை, குடிநீர், தெரு விளக்கு, பாதாளசாக்கடை, குப்பை அகற்றுதல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் பொது கழிப்பிட வசதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்க வேண்டும்,

முக்கியச் சாலைகளில் பாதுகாப்பு வசதிகள், மழைக்கால மழைநீர் வடிகால் வசதி மற்றும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண வேண்டும்.குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா, கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு மின் இணைப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும், மாநகராட்சியில் கையூட்டுப் பெறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினர் E. முத்துக்குமார் மற்றும் மாவட்டச் செயலாளர் K. நேரு ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் : லட்சுமி காந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed