மதுரை பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டியில் அலங்காநல்லூர் திமுக பிரமுகர் ஆனந்தகுமார் வீட்டில் சோதனை செய்வதற்காக சென்ற காவல்துறையினர் வீடு மாறி சோதனையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
மதுரையில் செம்மண் மற்றும் கல்குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி மற்றும் அலங்காநல்லூர் பாலமேடு பகுதியில் உள்ள திமுகவினர் வீடுகளில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

பாலமேடு அருகே, 66 மேட்டுப்பட்டியில் உள்ள திமுக பிரமுகர் ஆனந்தகுமார் வீட்டில் சோதனை இடுவதற்காக சென்ற காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை செய்யாமல் அருகில் இருந்த அலங்காநல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ் வீட்டில் சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது காலை ஆறு முப்பது மணி அளவில் சோதனையிட சென்ற காவல்துறையினர் அலங்காநல்லூர் பாலமேடு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இல்லாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்கு வந்த சோழவந்தான் முன்னாள் திமுக எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினரிடம் எவ்வாறு சம்பந்தமில்லாத வீட்டில் சோதனை இடலாம் எந்த அடிப்படையில் சோதனையில் ஈடுபட வந்தீர்கள் என்ற தகவலை வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் கேள்விகளை எழுப்பினார்.

மேலும் வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இல்லாமல் சோதனையிட வந்ததாகவும் இந்த பகுதி பொதுமக்கள் கூறினார்கள் திமுக பிரமுகர் ஆனந்தகுமார் வீட்டில் சோதனையிட வந்ததாக கூறிய காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளராக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டது
அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் சோதனை நடைபெற்று வரும் வீட்டின் முன்புஅந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர் இதனால் இந்த பகுதியில்
பரபரப்பு ஏற்பட்டது.

5 மணி நேர சோதனை முடிவடைந்த நிலையில் காவல்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோழவந்தான் முன்னாள் திமுக எம்எல்ஏ வெங்கடேசன் கூறுகையில்

காலை 6:00 மணிக்கு சோதனையில் ஈடுபட வந்த காவல்துறையினர் ஆனந்தகுமார் வீட்டில் சோதனை இல்லாமல் அருகில் இருந்த ஒன்றிய செயலாளர் தன்ராஜ் வீட்டில் சுமார் 5 மணி நேரம் சோதனை செய்த காவல்துறையினர் ஆவணங்கள் எதையும் எடுத்துச் செல்லவில்லை சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை அரசின் தவறுகளை மறைக்கவே இந்த சோதனை நடைபெறுகிறது திமுகவின் மீது போடப்படும் எந்த வழக்குகளையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed