கிருஷ்ணகிரியில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு தினந்தை முன்னிட்டு அவரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து சுதேசிக்காக தன் சொத்தையும், வாழ்க்கையையும் இழந்த தியாகச் செம்மலுக்கு சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சந்திரமோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 90-வது நினைவு தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலேயரின் கப்பல் ஏகபோகத்தை உடைக்க சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கி, தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே சுதேசி கப்பலை இயக்கி வரலாறு படைத்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

பள்ளியின் தலைமை ஆரியர் இரமேஷ் தலைமையில் நடைப்பெற்ற இந்த நினைவு நாளில் கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் திரு உருவச்சிலைக்கு சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சந்திரமோகன், நுகர்வோர் மன்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சரவணன், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கார்த்திக் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துக்கொண்டு மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதையும் செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆங்கிலேயரின் கப்பல் ஏகபோகத்தை உடைக்க 1906-ம் ஆண்டு சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கி, தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே இயக்கியதற்காக அப்போதைய ஆங்கிலேய அரசால் இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, கோவை சிறையில் செக்கிழுக்க வைக்கப்பட்டதோடு சுதேசிக்காக தன் சொத்தையும், வாழ்க்கையையும் இழந்த தியாக செம்மலின் நினைவு கூறப்பட்டது.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

