மதுரை விரகனூர் அணை அருகே ஸ்கூட்டி மீது கல்லூரிப் பேருந்து மோதிய விபத்தில், ஸ்கூட்டியில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், எஸ்.புளியங்குளம், எல்.கே.டி. நகரைச் சேர்ந்த ராஜன் மனைவி சரோஜா (50). இவர் தனது அண்ணன் சீனிவாசனுடன் நேற்று ஸ்கூட்டியில் (TN 64 Y 7323) சென்றுகொண்டிருந்தார். சாத்தூரில் நாளை நடைபெற உள்ள திருமண விழாவுக்கு சமையல் பணிக்காக இருவரும் வீட்டிலிருந்து புறப்பட்டு, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி விரகனூர் அணை அருகே சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் உள்ள பி.எஸ்.ஒய். கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து (TN 63 H 1105), ஸ்கூட்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சரோஜா மீது பேருந்தின் சக்கரம் ஏறியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சிலைமான் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். காவல் ஆய்வாளர் சுப்பையா தலைமையில் போலீஸார் விபத்து குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் : காளமேகம் ; எதிரொலி . இன் / 8939476777
