இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் எலிக்கன்ட் பேட்மிண்டன் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு திருவாடானை உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையேற்றார். ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளர் ரபிக் முன்னிலை வைத்தார். முன்னதாக ரோட்டரி சங்கத் தலைவர் பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார். செயலாளர் ஜான் பொன்னையா நன்றியுரை வழங்கினார்.

இப்போட்டியில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு அணியினர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.போட்டிக்கான ஏற்பாடுகளை பேட்மிண்டன் அகடமியின் பொறுப்பாளர்கள் ஸ்டாலின், எடிசன் ஆகியோருடன் தியாகு உள்ளிட்டோர்கள் செய்திருந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுகள் ரோட்டரி சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் தலைவர்கள் கந்தசாமி, சுப்பிரமணியன், கருணாகரன், ஜோதி மற்றும் கல்பனா அருட்தந்தை தேவசகாயம், மருத்துவர் ராமநாதன் மற்றும் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வீரர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் பரிசு வழங்கல்.

இப்போட்டியில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு அணியினர்கள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிக்கான ஏற்பாடுகளை பேட்மிண்டன் அகடமியின் பொறுப்பாளர்கள் ஸ்டாலின், எடிசன் ஆகியோருடன் தியாகு உள்ளிட்டோர்கள் செய்திருந்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுகள் ரோட்டரி சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் தலைவர்கள் கந்தசாமி, சுப்பிரமணியன், கருணாகரன், ஜோதி மற்றும் கல்பனா அருட்தந்தை தேவசகாயம், மருத்துவர் ராமநாதன் மற்றும் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : மக்கள் நலம் விரும்பி, / எதிரொலி / 8939476777
