கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சீர்குலைக்க திமுக அரசு மீது குற்றம் சாட்டி திமுக அரசுக்கு எதிராகவும், கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பேசுகையில்,

திமுக ஆட்சியில் தலை குனிந்து நிற்கும் தமிழகத்தை எடப்பாடியார் ஆட்சி அமைந்ததும் தமிழக மக்களை தலை நிமிர்ந்து நெஞ்சம் நிமிர்ந்து நடக்க செய்வோம் என திமுகவிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் சூலூரைத்தார்.

மேலும், திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வோம் எனவும்,
100 நாள் வேலை உறுதி திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வழங்குவோம் என வாக்குறுதி அளித்து நடைமுறை படுத்தவில்லை எனவும், ஐநூறுக்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதி அளித்து செயல்படுத்தாமல், தேர்தல் தோல்வி பயத்தினால் இன்று மகளிருக்கு ரூ.5000 வழங்கி இருக்கிறது எனவும், திமுக அரசு திறனற்ற அரசாக செயல்படுவதாகவும், அவர் குற்றம் சாட்டினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக, அமுமுக, உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர ,பேரூர் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed