தமிழகத்தில் வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவினை கட்சி தலைமையிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான தேமுதிக கட்சியினர் போட்டியிட தங்களது விருப்ப மனுவினை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சின்ராஜுயின் தலைமையில் சென்னையில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக கழக மாநில பொருளாளர் எல்.கே சுதீஷ் அவர்களிடம் கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட தனது விருப்ப மனுவினை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த் தனது மனைவி சுசிலாவுடன் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.

அப்போது கழக கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் அதிரடி பிரபு, கேப்டன் மன்ற செயலாளர் சின்னசாமி, கேப்டன் மன்ற துணை செயலாளர் சந்திரன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் தேமுதிக கட்சியை சேர்ந்த பார்க் சிவா, சுசிலா உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

கிருஷ்ணகிரி செய்தியாளர் : மாருதி – மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *