தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் திட்ட இயக்குனர் சீதாலட்சுமி (இ.ஆ. பெ ) அவர்களின் அறிவுத்தலின்படி, மேம்படுத்தப்பட்ட களப்பணிக்கான இலவச மருத்துவ முகாம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் தச்சூர் பகுதியில், 14 ம் தேதி செயின்ட் ஜோசப்ஸ் சுகாதார மையம் பொறுப்பாளர் சிஸ்டர் லுமினா தலைமையில் நடைபெற்றது.

ரியல் அறக்கட்டளை முனைவர் லாரன்ஸ் அவர்கள் வழிகாட்டுதலின்படி, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் செந்தில், மாவட்ட ஒருங்கிணைந்த எச். ஐ. வி /எய்ட்ஸ் மையம் குமாரசாமி, பேபி, பபிதா ஆகியோர் ஆலோசனையின்படி, நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், எச். ஐ. வி / எய்ட்ஸ் 95 சதவீதம் யுத்தி.
புதிய எச். ஐ. வி தொற்று மக்களை கண்டறிதல் மற்றும் ஏ. ஆர். டி சிகிக்சை அளித்தல் , வைரல் பளு குறைத்தல், மற்றும் ஐ. டி. எஸ் பிளஸ் பார்ட்னர் கண்டறிதல் அடிப்படையில் ஒவ்வொரு கிராம மற்றும் நகர பகுதியிலும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில், கற்பக விநாயக மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் நவீன், சித்தார்த், மரகத ராணி, அசோக், அஷ்மா, பணியாளர்கள் ஏ. ஆர். டி திட்ட மேலாளர் சாம், கனிமொழி, சுமித்ரா,செல்வராஜ், சரவணன், மதுராந்தகம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஜேம்ஸ் சங்கீதா, ஆய்வக நுட்புநர் திலகவதி, ரியல் அறக்கட்டளை திட்ட மேலாளர் மணிகண்டன், பணியாளர்கள் அஞ்சலி, சாந்தி, போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில், 150 க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்றனர். மேலும் , கண், தோல், எலும்பு, பொது மருத்துவம், எச். ஐ. வி,பால்வினை நோய், மஞ்சள் காமலை, கல்லீரல் அழற்சி , பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளும் அளிக்கப் பட்டது.

செய்திகள் : பாலசுப்பிரமணி /எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed