கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தி. இவரது கணவர் ராமன் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் கோவிந்திக்கு 5 பெண்களும், 1 ஆணும் உள்ளனர்.
இந்த நிலையில் கோவிந்தி கடந்த 2010 ம் ஆண்டு இறந்துவிட்டதாக கூறி அதேப்பகுதியை சேர்ந்த ஜோதி, பச்சையம்மாள், மாரியப்பன், சுரேஷ் ஆகிய நான்கு பேரும் போலியான வாரிசு சான்றிதழ் பெற்று இரு வேறு இடங்களில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தினை போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலத்தின் மூலம் பத்திரப்பதிவு செய்து அபகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ராமனின் மனைவி கோவிந்தி போச்சம்பள்ளி காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் மனுக் கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோவிந்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாரை நேரில் சந்தித்து புகார் மனுவினைக் கொடுத்தனர்.
இது குறித்து பேசிய இராம கவுண்டர்…..
சந்தம் பட்டியை சேர்ந்த மூதாட்டி கோவிந்தி இறந்து விட்டதாக கூறி போலியான வாரிசு சன்றிதழ் பெற்று பல லட்சம் ம்திப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர், மீறி கேட்டா மிரட்டல் விடுத்து வரும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அகபரித்து உள்ள ஒரு ஏக்கர் நிலத்தையும் மீட்டுத்தர வேண்டும் பேலியான வாரிசு சான்றிதழ் மற்றும் பத்திர பதிவு செய்து கொடுத்த பத்திரப்பதிவு அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

உயரோடு இருக்கும் மூதாட்டி இறந்து விட்டதாக கூறி பல லட்சம் மதிப்பு நிலத்தை போலியான பத்திரம் தயாரித்து அபகரித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

