முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல் கார்த்திகை திருவிழா இன்று காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தின் அருகே எழுந்தருளிய பின்னர் வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.

இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய விழா வரும் 25 ம் தேதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைகிறது. இதில், 23 ம் தேதி மாலை முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் . பட்டாபிஷேகத்தை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவார் பின்னர் 24 ம் தேதி காலை சுப்பிரமணியசுவாமி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் சிறிய வைரத்தேரில் ரத வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் தேரோட்டம் நடைபெறும்.

கார்த்திகை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் விழா 24 ம் தேதி மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை மீது 3 1/2 அடி உயரம் 160 லிட்டர் கொள்ளவு கொண்ட தாமிர கொப்பரையில் 160 லிட்டர் நெய் , 110 மீட்டர் நீளமுள்ள காடா தணி 5 கிலோ சூடம் கொண்டு மகா தீபம் ஏற்றப்படும்.

இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமங்களில் வீடுகள் தோறும் தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.. இந்த விழாவில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939576777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed