முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக விளங்கும் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில், கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விளம்பரம் என்ற பெயரில் நடத்தியுள்ள செயல்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

பெண்களைப் போன்று உடையலங்காரத்தில், உடல் பாகங்கள் வெளிப்படும் வகையிலான கவர்ச்சியாக தெரிவது போன்று ஆடைகளை அணிந்து, பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடனமாடியும், கவர்ச்சியான பாவனைகளுடன் ஆட்டம் போட்டும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அமைந்துள்ள புனிதத் தலத்தின் அருகே இத்தகைய வீடியோ எடுக்கப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சுப நிகழ்ச்சிகளுக்குப் பிறகு உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கப்படும் அன்பளிப்புப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை விளம்பரப்படுத்துவதற்காகவே இத்தகைய வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் விளம்பரம் என்ற பெயரில் இத்தகைய செயல்கள் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed