
ஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் தீ விபத்து; கோயிலின் தெற்கு கோபுரம் அருகே உள்ள பிரசாதம் தயாரிக்கும் சமையல் கூடத்தில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது, இதையடுத்து சமையல் ஊழியர்கள் கேஸ் சிலிண்டர்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டு, மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.
தீயின் தீவிரத்தைக் கண்டு பக்தர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சி நடைபெற்றது. கோயிலுக்குள் பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் நுழைவாயில்கள் மூடப்பட்டன. அதிகாரிகள் மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777
