தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது அதைப்பற்றி கவலைப்படாமல் இடைத்தேர்தல் தொகுதிகளில் தவெக எண்ணிக்கை அதிகப்படுத்த அக்கறை செலுத்துகிறார்கள் விஜய் ?
6 மாத தவெக ஆட்சியில் தமிழகம்
6 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது; வெறும் சைகை மட்டும் காட்டினால் விலைவாசி உயர்வு குறைந்து விடுமா ; சட்ட ஒழுங்கு சரியாகி விடுமா… ? முதல்வரின் பணி என்பது வெறும் கையை காட்டிவிட்டு செல்வதுதான் என்று நீங்கள் நினைத்து விட்டீர்களா?
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதல்வர் விஜய்க்கு கேள்வி ?
தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுக்கு மட்டும் முதல்வர் முகாமிட்டிருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் தவெக அரசு கடந்த 6 மாத காலங்கள் பதவியேற்று, இன்றைக்கு அரிசி, மளிகைச் சாமான்கள், காய்கறிகள் விலைகள் தாறுமாறாக உயர்ந்திருப்பது குறித்து அக்கறை செலுத்தினாரா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கே வெளிச்சம்?
கடந்த மாதம் 126 ரூபாய்க்கு விற்ற துவரம்பருப்பு இன்றைக்கு 143 ரூபாய், 120 ரூபாய்க்கு விற்ற உளுந்தம்பருப்பு 128 ரூபாய்,105 ரூபாய்க்கு விற்ற பாசிப்பருப்பு 112 ரூபாய்,80 ரூபாய்க்கு விற்ற கடலைப்பருப்பு 90 ரூபாய், 330 ரூபாய்க்கு விற்ற குண்டு மிளகாய் ரூபாய் 420 ரூபாய்,அரிசி விலை ஒரு சிற்பம் என்ன விலைக்கு விற்பது என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
வெங்காய விலையைச் சலுகை விலையில் கொடுக்கிறோம் என்று டெண்டர் கொடுத்து, அந்த டெண்டர் வந்ததற்குப் பிறகு அந்த வெங்காயத்தை எடுக்காமல் அது அழுகிப் போய், எங்கே போனது வெங்காயம் என்று தேடுகிற ஒரு நிலைமையிலே விலையும் உச்சத்திலே போய்விட்டது. வாங்கிய வெங்காயத்தையும் காணவில்லை.
இது குறித்து எல்லாம் ஆய்வு நடத்தி, தீர்வு காண அக்கறை செலுத்தாத முதல்வர் விஜய் இடைத்தேர்தலில் தவெக சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கையை உயர்த்துவதில் மட்டும் அவர் எப்படி தனி அக்கறை செலுத்துகிறார் என்பதை நான் காழ்புணர்ச்சியோடு சொல்லவில்லை.
ஒரு தூய ஆட்சி தருகிறேன் என்று சொன்னவர், எப்படி ஒரு தூய எண்ணத்தோடு இடைத்தேர்தல் நடைபெறுகிற விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு முகாமிட்டு எவ்வளவு அக்கறை செலுத்துகிறார் என்பதைப் பாருங்கள். நீங்கள் வாக்களித்ததற்கு பின்பு உங்களை மறந்துவிடுவார்.
இந்த விலைவாசி உயர்வை ஆதரிக்கின்ற வகையில் அரசே ஆவின் நெய் முதலான இனிப்புப் பொருட்களின் விலையையும் இந்தத் தவெக அரசு சத்தமில்லாமல் உயர்த்தியிருக்கிறது.
சின்ன வெங்காயம் 83 ரூபாயிலிருந்து 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது,பீன்ஸ் 90 முதல் 100 வரையிலும் விற்கப்படுகிறது. தமிழக முதல்வரும், இதர அமைச்சர்களும் இந்த விலைவாசி உயர்வு பற்றி எந்தக் கவலையும் அடைந்ததாக நமக்குத் தெரியவில்லை. மௌனமாக காலத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கோ அல்லது அமைச்சர்கள் கவனத்திற்கோ நேரில் சென்று கோரிக்கை மனுவாகக் கொடுக்கலாம் என்று தலைமைச் செயலகத்தில் மக்கள் சொல்லும் போது, அமைச்சர்கள் தங்கள் அலுவலக அறைகளுக்கு வந்து அரசுப் பணிகளை கவனிப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது என்று மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். கோரிக்கை மனுக்களோடு அமைச்சர்களைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள் பல மணி நேரம் காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்வதுதான் தலைமைச் செயலகத்தின் வாடிக்கையான காட்சியாக இருக்கிறது.
தமிழகம் முழுவதும் பல ஊர்களிலிருந்து மக்கள் தலைமைச் செயலகம் வந்து பிரச்சினைகளை அமைச்சரிடம் நேரிலே சொல்லலாம் இதனால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ அமைச்சரை நேரிலே பார்த்து குறைகளைச் சொல்லிவிட்டோம் என்ற குறைந்தபட்ச மன திருப்தி கூட அடைய முடியாத ஒரு வகையிலேதான் கடந்த 6 மாத கால தவெக ஆட்சியில் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தின் வருகை என்பது மிகப்பெரிய விமர்சனத்திற்கும் சர்ச்சைக்கும் உள்ளாகி இருக்கிறது.
ஆகவே இன்றைக்கு மொத்தத்தில் இன்றைக்கு தமிழகம் முழுவதும் பிரச்சினைகள் இங்கே இருக்கிறது. தவெக அரசின் தீர்வுகள் எங்கே என்று கேட்டால், இடைத்தேர்தல் நடைபெறுகிற சட்டமன்றத் தொகுதியில் முகாமிடுகிற முதல்வரிடத்தில் இதற்கான தீர்வு கிடைக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை.
இன்னொரு உதாரணம் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 24 வரை இந்த ஒரு மாத காலகட்டத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 10 குழந்தைகள் வரை காணாமல் போயிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. இதில் மாயமான 4 குழந்தைகள் தற்போது உயிரோடே இல்லை என்கிற ஒரு அதிர்ச்சி செய்தியும் இருக்கிறது. ஒரு குழந்தை மட்டும் மீட்கப்பட்டுள்ளது, மீதமுள்ள குழந்தைகளுடைய நிலை என்பது அந்தோ பரிதாபம்.
அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தலால் தவெக அரசில் தமிழகத்தில் தலைப்புச் செய்தியாக ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் செஞ்சி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றார்கள்.
குட்டீஸ்களே, உங்களுக்கு ஏதாவது வேணும்னா அடிச்சு புடிச்சு அதை சாதிக்கிறீங்க இல்ல, உங்க அப்பா, அம்மா கிட்ட அதே மாதிரி இந்த விஜய் மாமா ஜெயிக்கணும்ன்றதுக்காக உங்க தாய் தந்தையரிடத்திலே, உங்க வீட்டில் இருக்கிற பெரியவங்க கிட்ட விசிலுக்கு ஓட்டு போட வைங்க என்று குழந்தைகளிடம் பிரச்சாரம் செய்து தேர்தலுக்கு முன்பாக வெற்றியும் பெற்று பதவி ஏற்றபோது நம்ம முதல்வர் விஜய் அவர்கள் யாருக்கு நன்றி சொல்லுகிறாரோ இல்லையோ மறக்காமல் இந்த விஜய் மாமாவின் குட்டி நண்பா நண்பீஸ் அவர்களால்தான் இந்த ஆட்சி அமைந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி நன்றி கடன் செய்ய வேண்டும் உங்களுக்காக உங்கள் எதிர்காலத்தை மனதிலே வைத்து அனைத்து நல்ல விஷயங்களையும் இந்த விஜய் மாமா செய்து கொடுப்பேன். நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் என்று சொல்லி அன்னைக்கு தமிழ்நாட்டே புல்லரிக்க வைத்தார் முதல்வர் விஜய்.
ஆனால் விஜய் ஆட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு குழந்தைகள் ,குட்டி நண்பா, நண்பீஸ் கடத்தல் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் என்று எண்ணற்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
முதல்வர் அவர்களே, உங்களை ஆட்சி அரியணையில் அமர்த்திய குட்டி நண்பா,நண்பீஸ் நீங்கள் இப்படி விசுவாசத்தைக் காட்டுகிறீர்களே, இன்றைக்கு 34% வாக்களித்த மக்கள் 65% வாக்களிக்காத மக்கள் என்று நீங்கள் வேறுபாடு பார்க்கிறீர்களா?
இந்த மக்களுக்கு இன்றைக்கு நீங்கள் வெறும் சைகையை மட்டும் இன்றைக்கு பரிசாகத் தருகிறீர்களே, அவர்கள் சைகையை வைத்து விலைவாசியை குறைக்க முடியுமா? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியுமா? உங்கள் சைகையை வைத்துக்கொண்டு அவர்கள் வாழ்ந்து விடத்தான் முடியுமா? கல்வி கற்றுவிட முடியுமா? வேலைவாய்ப்பு பெற்றுவிட முடியுமா? முதல்வரே, நீங்கள் மிகப்பெரிய சிந்தனைவாதி என்று நாட்டு மக்கள் நம்புகிறார்கள். நீங்கள் பெரிய அறிவாற்றல் உள்ளவர் என்று நாட்டு மக்கள் நம்புகிறார்கள். நம் வாழ்க்கையிலே மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார் என்று நம்பித்தான் உங்களை அரியணையில் அமர்த்தி இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் எதுவுமே பேசாமல் மௌன சாமியாராக கடந்து செல்கிறீர்களே, இது நியாயமா என்பதுதான் இப்போது குட்டி நண்பா, நண்பீஸ் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
இடைத்தேர்தலில் வெற்றி என்பது கட்சிக்கு மிக முக்கியம். கட்சி வளர்ச்சிக்கு முக்கியம். கட்சியின் ஆட்சிக்கு முக்கியம். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஒரு அரசியல்வாதியாக அதிலே நீங்கள் அக்கறை செலுத்துவது ஒன்றும் தவறாக எடுத்துக்கொள்ள முடியாது கூடாது. ஆனால் இன்றைக்கு நீங்கள் இடைத்தேர்தல் தொகுதிகளை மட்டும் இவ்வளவு அக்கறை செலுத்துகிறீர்களே, அதோடு இந்த தமிழ்நாட்டின் விலைவாசி உயர்வு பிரச்சினைக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கும் உங்களுடைய குட்டி நண்பா நண்பீஸ் எதிர்காலத்திற்கும் ஏதாவது நீங்கள் செய்வதற்கு சிந்தித்தீர்களா? அக்கறை காட்டினீர்களா? நேரம் செலவிடுத்தீர்களா?
இல்லை முதல்வரின் பணி என்பது வெறும் கையை காட்டிவிட்டு செல்வதுதான் என்று நீங்கள் நினைத்து விட்டீர்களா? இந்த 6 மாதத்தில் தமிழகம் 6 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாக மக்கள் கவலையிலே இருக்கிறார்கள். இனி ஒவ்வொரு மாதமும் நீங்கள் அடியெடுத்து கடந்து செல்கிறபோது தமிழ்நாடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கிற கவலையில் தான் அக்கறையோடு இதை தமிழ்நாட்டு மக்கள் முன்வைக்கின்றேன். இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என கூறினார்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
