மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திருமூலநாத சுவாமி திருக்கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு 15 ம் ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று காலை கோவில் முன்பு முகூர்த்தகால் நடப்பட்டது.
முன்னதாக, முகூர்த்த காலுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிவாசாரியார் கண்ணன் என்ற பரசுராம் தலைமையில் அர்ச்சகர் செந்தில் பூஜைகள் செய்தனர் கந்த சஷ்டி விழா வருகின்ற 10 ம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்க உள்ளது. தினசரி வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும்.
13 ம் தேதி தேர் சப்பரத்தில் மின்னொளி அலங்காரத்தில் பக்தி பஜனை பாடல்கள் உடன் வள்ளி தேவசேனா முருகப்பெருமாள் உள் வீதி உலா வருதல், 14 ம் தேதி சனிக்கிழமை அன்னை பராசக்தி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளிடமிருந்து சக்திவேல் பெறுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து முருக பெருமாள் சுவாமி சன்னதி அடைந்து விசேஷ பூஜைகளும் நடைபெறும்.

15 ம் தேதி கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி திருக்கோவில் முன்பாக நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து 16 ம் தேதி திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா முருகப்பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று அன்னதானம் நடைபெற உள்ளது. அன்று இரவு வள்ளி தேவசேனா முருகா பெருமாள் திருக்கல்யாண கோலத்தில் நான்கு ரத வீதிகளில் ஊர்வலம் நடைபெற உள்ளது விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் விழா கமிட்டியாளர்கள் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
அனைத்து நாட்களிலும் காலை, மாலை பஜனை பாடல்கள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற உள்ளது. கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை தக்கார் மாலதி ஆய்வாளர் சாவித்திரி செயல் அலுவலர் கார்த்திகைசெல்வி மற்றும் அறநிலைத்துறை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
