சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் 2,500 பேருக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கல்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவை அடுத்த கம்மவாரம்பட்டி கிராமத்தில், ஸ்ரீ சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஸ்ரீ காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு யாக பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
தொடர்ச்சியாக 10 நாளும் யாகம் செய்யப்பட்டு, அம்பாளுக்கு செண்டி பூர்ணாதி கொடுத்து விசேஷமாக பூஜை நடத்தப்பட்டது.

இதையொட்டி, ஸ்ரீ காலபைரவர் சுவாமிக்கு வண்ண வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பெண்களின் மங்கல வாழ்வை வேண்டி சுமங்கலி பூஜையும் நடத்தப்பட்டது. லோகநாதன் சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆன்மிக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, ராணிப்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா என பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீ காலபைரவர் சுவாமியை வழிபட்டு, பூஜைகளில் கலந்துகொள்வதன் மூலம் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதாகப் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். குறிப்பாக, வியாபாரம் நஷ்டமடையாமல் பெருகவும்,
தொழில் வளம் ,விவசாயம்
செழிக்கவும் திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தைப் பேறு வேண்டியும் பலர் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டதாகக் கூறினர்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, குழந்தைகள் ஒன்பது பேர் அம்மன் வேடமணிந்து பங்கேற்றனர். அம்மன் அலங்காரத்தில் அரங்கேற்றிய பரதநாட்டிய நிகழ்ச்சி, அங்கு திரண்டிருந்த பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.பக்தி உணர்வைத் தூண்டும் வகையில் அமைந்த இந்த நடன நிகழ்ச்சியைக் கண்டு பொதுமக்கள் மெய்சிலிர்த்தனர்.

மேலும், விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு லோகநாதன் சுவாமி தலைமையில் புடவைகள் வழங்கப்பட்டன. மொத்தம் 2,500 புடவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இறை வழிபாடு, பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் என ஆன்மிகத்தையும் மக்கள் சேவையையும் ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ஸ்ரீ காலபைரவர் சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.
மேலும் இந்த பூஜையில் பல்வேறு இடங்களில் இருந்து மடாதிபதிகளும்
பீடாதிபதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி 26 வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : மூர்த்தி எதிரொலி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed